சின்னசேலம் அருகே ஆசிரியையை தாக்கிய 2 பேர் கைது

சின்னசேலம், பிப். 12: சின்னசேலம்  அருகே கீழ்பூண்டி வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்  மனைவி இந்திராகாந்தி(42). இவர் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில்  ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சிவகுமாரின் பங்காளி  முறையான தியாகராஜனின் மகள் சத்தியா(25) என்பவரும் அதே பள்ளியில் ஆசிரியையாக  பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சத்தியாவை பள்ளி நிர்வாகம் திடீரென பணியை  விட்டு நிறுத்தியதாக தெரிகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் தன்னை வேலையை விட்டு  நிறுத்தியதற்கு இந்திராகாந்திதான் காரணம் என தவறாக நினைத்து அவரை சத்தியா திட்டியதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் சம்பவத்தன்று இந்திராகாந்தி பள்ளியை விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது,  சத்தியா(25) மற்றும் அவரது தாய் செல்வி(40),  உறவினர் ெவள்ளி (22) ஆகிய  3பேரும் சேர்ந்து அவரை திட்டி, கல்லால் தலையில் தாக்கியதாக தெரிகிறது.  இதில் இந்திராகாந்தி தலையில் பலத்த காயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து இந்திராகாந்தி அளித்த  புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் செல்வி உள்ளிட்ட 3பேர் மீதும் வழக்கு  பதிவு செய்து செல்வி, ெவள்ளி ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.

Related Stories: