கள்ளக்குறிச்சி நகராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கள்ளக்குறிச்சி, பிப். 12: கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி செலுத்தாத கட்டிடங்களில் உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கை நகராட்சி ஊழியர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகிய தொகைகளை 2019-20ம் ஆண்டு வரை நிலுவை இல்லாமல் செலுத்தி கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertising
Advertising

தவறும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் இணைப்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி துண்டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் குடிநீர் கட்டணம் மற்றும் வீட்டு வரி செலுத்தாத காரணத்தால் அவர்களது குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: