மனைவியுடன் தகராறு விஷம் குடித்து தொழிலாளி பலி

சின்னசேலம், பிப். 12:  சின்னசேலம் அருகே தோட்டப்பாடி கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சுகந்தன்(27). கூலித்தொழிலாளி. இவருக்கும், அம்மையகரத்தை சேர்ந்த அலமேலுவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு

குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. இதனால் அவ்வப்போது அலமேலு கோபித்துக்கொண்டு தாய்வீடு போய்விடுவதும்,  மாமனார் சேகர் மருமகளை சமாதானப்படுத்தி அழைத்து வருவதும் வாடிக்கையாக
Advertising
Advertising

இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 3ம்தேதி வழக்கம்போல கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அலமேலு கோபித்து கொண்டு தாய்வீடு சென்று விட்டார். இதையடுத்து கணவன் சுகந்தனும், அவரது தந்தை சேகரும் சென்று அலமேலுவிடம் சமாதானம் பேசி உள்ளனர். ஆனால் அலமேலு வரவில்லை. இதனால் மனமுடைந்த சுகந்தன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: