ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

உளுந்தூர்பேட்டை,  பிப். 12: உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் செல்வமணி(32). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் தந்தை சவுந்தர்ராஜன் மற்றும் எறஞ்சி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், காயத்ரி  ஆகியோரை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டு இருந்தார். திருச்சி  நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகில் சென்றபோது ஆட்டோ சாலையின் நடுவே இருந்த  தடுப்பு கட்டையில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertising
Advertising

இதில்  படுகாயமடைந்த 4 பேரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி ஆட்டோ  டிரைவர் செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எடைக்கல்  காவல்நிலையத்தில் சவுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர்  ஜெகதீசன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories: