மரக்காணம் அருகே 3 பைக் திருடர்கள் கைது

மரக்காணம், பிப். 12: மரக்காணம் அருகே ஆலத்தூர்  இணைப்பு சாலை பகுதியில் மரக்காணம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர். அப்போது ஆலத்தூர் பகுதியில் இருந்து மரக்காணம் நோக்கி ஒரே மோட்டார் பைக்கில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி சோதனை செய்து விசாரித்துள்ளனர். இதில் அந்த மூன்று நபர்களும் முரண்பாடான பதிலை கூறினர். இதனால் அவர்களை மரக்காணம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து முறையாக விசாரித்தனர்.

Advertising
Advertising

அதில் அவர்கள் ஆலத்தூர் ஆனந்து (20), தாழங்காடு சிவா (20), கைப்பானி முரளி (21) ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தொடர்ந்து இப்பகுதியில் மோட்டார் பைக்குகள் திருடி வெளியிடங்களில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் இருந்து 3 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மரக்காணம்  போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: