கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, பிப். 12: புதுவையில் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் தலைமை அலுவலக பொதுமேலாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு கன்வீனர்கள் சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் கொளஞ்சியப்பன், தண்டபாணி, மாவட்ட செயலர்கள் அரிதாஸ், தனசேகரன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

Advertising
Advertising

இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி சேவையை உடனடியாக துவங்க வேண்டும், பிஎஸ்என்எல்லின் கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை உடனே வழங்க வேண்டும், 2 மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: