சாயர்புரம் போப் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

ஏரல், பிப். 11:  பண்டாரவிளையில் நடந்து வரும் சாயர்புரம் போப் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

 சாயர்புரம் போப் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா பண்டாரவிளையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கணிதத்துறை பேராசிரியர் சுகந்தா தலைமை வகித்தார். பேராசிரியை வசந்தி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சண்முகநாதன் எம்.எல்.ஏ பங்கேற்று நாட்டு நலப்பணித்திட்ட முகாமை துவக்கி வைத்தார். மேலும் அவர் முதல்நாள் நிகழ்ச்சியாக வாசன் கண் மருத்துவமனை சார்பில் நடந்த கண்சிகிச்சை முகாமையும் துவக்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அழகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், பெருங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்பாபு, பெருங்குளம் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சந்திரபால், ஒன்றிய கவுன்சிலர் முத்துசெல்வன், பண்டாரவிளை பாஸ்கர், திருத்துவசிங், பால்துரை, பெருமாள், எபன், பாலஜெயம், சாம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: