மாசி பெருவிழாவுக்காக புதிய தேர் செய்யும் பணி மும்முரம்

மேல்மலையனூர், பிப். 11: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெறும் மாசி பெருவிழாவுக்காக புதிய தேர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம்   மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில்  பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். உலகெங்கும் உள்ள அங்காளம்மன் திருத்தலங்களுக்கு தலைமை பீடமாக அமைந்துள்ள இந்த திருத்தலத்தில் மாசி பெருவிழா வருகின்ற 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது.மாசி பெருவிழாவுக்காக கோயில் நிர்வாகம் முன்னேற்பாடுகளை வெகு தீவிரமாக செய்து வருகின்றது. மாசி பெருவிழாவின் முக்கிய விழாவான திருத்தேர் அன்று விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தேரோட்டத்திற்காக  திருத்தேர்செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்காளம்மன் திருக்கோயிலின் தேரானது பச்சை பனைமரம் புளியமரம் காட்டுவா மரங்களை கொண்டு வருடம் தோறும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு மாசி பெருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் அங்காளம்மன் திருவீதி உலா வருவது கூடுதல் சிறப்பாகும்.

இந்த தேரின் சிறப்பு பச்சை மரத்திலான மரங்களை கொண்டு புதிய தேரினை வருடம் தோறும் செய்து தேரோட்ட நிகழ்வு நடத்துவது வெகு சிறப்பு வாய்ந்ததாகும் இத்தேருக்கு படை தேர் எனக் கூறப்படுகிறது. இத்தேரில் அங்காளம்மனுக்கு துணையாக ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் இந்த தேரில் வீதி உலா வருவதால் படை தேர் என அழைக்கப்படுகிறது.திருத்தேர் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூருக்கு வரக்கூடும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகிறனர்.

Related Stories: