பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

திண்டிவனம், பிப். 11: ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து ஏராளமான பயணிகள் திண்டிவனம், வந்தவாசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும், பேருந்து நிறுத்தம் அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு செல்லவும், வெயில் மழை என்றும் பாராமல் பேருந்துக்காக பலமணி நேரம் காத்திருக்கும் சூழல் இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மயிலம் எம்எல்ஏ மாசிலாமணி நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் ராஜாராம், காளி, அமராபதி, மணி, குமாரவேலன், திருஞானம், ஆறுமுகம், பாக்கியராஜ், ராஜதுரை, கோபாலகிருஷ்ணன், பெருமாள், ராமையா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: