×

முதிய தம்பதி கலெக்டரிடம் மனு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி அரியலூரில் கிராம செவிலியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,பிப்.4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் வசந்தா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் சுகாதார செவிலியர், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். பிற நிலையினரின் பணியினை திணிப்பதை நிறுத்த வேண்டும்.

இரண்டு குழந்தை அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள தாய்மார்கள் நிரந்தர குடும்ப நலம் ஏற்பதும், ஏற்காததும் ஏற்போரின் உரிமை அதனை கிராம சுகாதார செவிலியரிடம் திணிப்பதை நிறுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொருளாளர் தமிழ்ச்செல்வி, செயலர் பாலாம்பிகை, துணைத் தலைவர்கள் ஜீவா, இந்திராணி, அமைப்புச் செயலர் மணிமேகலை, பிராசார செயலர் மனோன்மணி, இணைச் செயலாளர்கள் வான்மதி, வைரக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Tags : Village nurses ,Ariyalur ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...