×

அண்ணா நினைவு நாளையொட்டி திமுக, திகவினர் அமைதி பேரணி

அரியலூர், பிப்.4: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு காந்தி பூங்காவில் இருந்து அமைதி பேரணி திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி கலந்துகொண்டு நடைப்பயணமாக சென்று அண்ணா சிலை அருகே அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர்,சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், கொள்கை பரப்பு துணை செயலாளர்

பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகர செயலாளர் கருணாநிதி, திக மண்டல செயலாளர் காமராஜ், திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் தனசேகர், மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமராஜன், ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜமாணிக்கம், ஆசிரியர் கண்ணதாசன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அதிமுக சார்பில் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தலைமையில் அதிமுகவினர் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் தங்க பிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தா.பழூர்

அண்ணா நினைவு நாளையொட்டி தா.பழூர் மற்றும் இடங்கண்ணி கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கண்ணையன், காங்கிரஸ் வட்டார தலைவர் சக்கரவர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விசிக ஒன்றிய செயலாளர் தங்கராசு, பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : occasion ,memorial ,Anna ,DMK ,Dikavinar Peace Rally ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வேலூர்...