×

10ம் தேதி தேர்பவனி தா.பழூர் சரகத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

தா.பழூர், பிப்.4: தா.பழூர் ஒன்றியத்தில் சி.சி.டி.வி கேமராக்களை அமைத்து குற்றங்கள் நடக்காமல் இருக்க காவல்துறைக்கு உதவியாக இருக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தா.பழூர் ஒன்றியத்தில் காவல் சரகத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகளிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டம் தா.பழூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையில் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவருக்கு அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் பாதுகாப்பு, பொது மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்கருதி அந்தந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பள்ளி அமைந்துள்ள இடங்கள், பொது இடங்கள் சந்தை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று காவல்துறையின் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. முன்னதாக அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். கூட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 10 நபர்களுக்கு மேல் இருக்கும்படி விழிப்புணர்வு குழு உருவாக்க வேண்டும். குழுவில் அனைத்து இனத்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியில் சார்ந்தவர்கள் இருக்க வேண்டும. கிராமங்களில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு சட்டம்-ஒழுங்கு பிரச்னை, சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு ஊர் பெரியவர்கள் பேசி எடுக்கும் முடிவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நேரங்களில் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து துணையாக இருக்க வேண்டும். மேலும் தங்கள் கிராமங்களில் சட்டத்திற்குப் புறம்பாக மது விற்பனை, சூதாட்டம், லாட்டரி சீட்டு, மணல் கடத்தல் போன்றவை நடந்தாலோ, சந்தேகப்படும்படியான அந்நிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலும் உடனே காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

தங்கள் ஊராட்சியில் அனைத்து பகுதியிலும் கேமராக்களை அமைத்து குற்றங்கள் நடக்காமல் இருக்க காவல்துறைக்கு உதவியாக இருக்க வேண்டும், வாகன ஓட்டுனர்கள் மோட்டார் வாகன சட்டத்தை கடைபிடித்து தலைக்கவசம் அணிதல், ஓட்டுநர் உரிமத்துடன் ஓட்டுதல் காப்பீடு சான்று வைத்திருத்தல் ஆகியவற்றை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்பதை தகவல் பலகைகளில் எழுதி முக்கியமான இடங்களில் வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ரமே-ஷ் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் தா.பழூர் சுத்தமல்லி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் அனைத்து கிராம பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை காவல்துறைக்கும் வைக்கப்பட்டது.

Tags : Terpawani ,Task Shop ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின்...