×

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை

திருச்சி, ஜன. 29: திருச்சியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர். ஓட்டலில் சென்னையை சேர்ந்தவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருச்சி எ.புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்தவர் ஞானசேகர்(35), சென்ட்ரிங் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர், சம்பாதிக்கும் பணத்தை தினமும் குடித்துவிட்டு வந்தார். நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்ததால் மனைவி ஜெயந்தி திட்டினார். இதனால் மனமுடைந்த ஞானசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி எ.புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனாராணி(20). 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 23ம் தேதி ஜமுனாராணி எலிபேஸ்ட் தின்றார். அவரை உறவினர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர். குடும்பத்தகராறில் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வரதட்சணை கொடுமையா என உதவி கமிஷனர் அஜித் விசாரித்து வருகிறார். ஜமுனாராணிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மற்றொரு சம்பவம்: சென்னை கே.கே.நகர் 2வது செக்டார் 8வது தெருவை சேர்ந்தவர் துரைசிங்கம்(63). கடந்த 22ம் தேதி திருச்சி வந்த துரைசிங்கம் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அன்று வெளியில் சென்று விட்டு திரும்பி வந்த அவர் 24ம் தேதி அறைக்கு சென்றவர் அதன்பின் கதவை திறக்கவில்லை. இந்நிலையில் அவரது அறையிலிருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த கன்டோன்மென்ட் எஸ்ஐ சுலோச்சனா வந்து பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது படுக்கையில் துரைசிங்கம் இறந்து கிடந்தார். அவர்து உடல் அழுகியிருந்தது. மேலும் விசாரணையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தது தெரியவந்தது. இதனால் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : women ,Trichy ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...