×

கலெக்டர் தகவல் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி, ஜன.29: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், நகராட்சி சுகாதார ஆவாளர் வெங்கடாசலம், தூய்மை இந்தியா திட்ட கள அலுவலர் மாரிதாஸ் மற்றும் அலுவர்கள் திருத்துறைப்பூண்டி புது பஸ் ஸ்டான்ட், பழைய பஸ்ஸ்டான்ட், டிமு கோர்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசால் தடைசெய்யப்பட்ட ரூ 1. 50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக்கவர்கள், நெய்யப்படாத பைகள் விற்பனை செய்து வருவது கண்டறிந்து பறிமுதல் செய்து விற்பனை செய்து வந்த கடைகளுக்கு ரூ 60,000 அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு எரிப்பதற்கு அனுப்பி வைக்கப்படும் சுதாரா ஆய்வாளர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

Tags : Collector ,government ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...