உடையாளூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 37 மனுக்கள் மீது விசாரணை

கும்பகோணம், ஜன. 29: கும்பகோணம் அடுத்த உடையாளூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 37 கோரிக்கை மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. கும்பகோணம் அடுத்த உடையாளூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் உஷா தலைமை வகித்தார். துணை தாசில்தார் முருககுமார் முன்னிலை வகித்தார். கும்பகோணம் நிலவள வங்கி தலைவர் அறிவழகன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். இதில் 37 மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: