பாதாள சாக்கடை அடைப்பால் குடந்தை மேற்கு காவல் நிலையத்தில் வாசலில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கும்பகோணம், ஜன. 29: பாதாள சாக்கடை அடைப்பால் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய வாசலில் கழிவுநீர் வழிந்தோடி தேங்கி நிற்கிறது.

தஞ்சை- கும்பகோணம் மெயின் ரோடு பொற்றாமரை குளத்தின் எதிரில் மேற்கு காவல் நிலையம் உள்ளது. காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், 10க்கும் மேற்பட்ட போலீசார், தனிப்பிரிவு, குற்றப்பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
Advertising
Advertising

இந்நிலையில் காவல் நிலையம் அருகில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் அடைத்து கொண்டு கழிவுநீர் வெளியேறி வந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதுபோன்ற நிலையை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதால் காவல்நிலையத்தின் வாயிலில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைத்து கொண்டு கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் போலீசார், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தின் முன் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சுகாதாரமாக்க வேண்டுமென போலீசார், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: