தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்காக 21 இடங்களில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு

தஞ்சை, ஜன. 29: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக 21 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், பி.வி.செல்வராஜ் மேல்நிலைப்பள்ளி வளாகம், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி வளாகம், ஐடிஐ மைதானம், டிபிஎஸ் நகர் திறந்தவெளி மைதானம், பிஎஸ்என்எல் அலுவலக திறந்தவெளி மைதானம், புதிய பஸ் நிலைய திறந்தவெளி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் சரபோஜி கல்லூரி மைதானம், ஆயுதப்படை மைதானம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி மைதானம், திலகர் திடல், சீனிவாசபுரம் சாலை, சிவகங்கை பூங்கா (முக்கிய பிரமுகர்கள் வாகனம்), அரண்மனை மைதானம், திருவள்ளுவர் தியேட்டர் வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் தொல்காப்பியர் சதுக்கம், கரந்தை தற்காலிக பஸ் நிலையம், ரயில்வே குட்ஷெட் சாலை, புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி சாலையில் கந்த்சரஸ் மகால் எதிரே உள்ள பேக்ட் மைதானம், நுகர்பொருள் வாணிப கழக வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சீனிவாசபுரம் சாலை, தொல்காப்பியர் சதுக்கம், கரந்தை தற்காலிக பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மட்டும் பஸ்கள் வந்து செல்லும். அங்கிருந்து பக்தர்கள் குடமுழுக்கை காண்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வாகனங்களில் குறிப்பிட்ட தூரம் வரை அழைத்து செல்லப்படுவர்.

Related Stories: