அரசு பேருந்தை வழிமறித்து கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 29: திருக்காட்டுப்பள்ளி அடுத்த காருகுடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியில் உள்ளார். கடந்த 26ம் தேதி பவனமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் காரில் வந்த 4 பேர், அரசு பேருந்தை மறித்தனர். பின்னர் கண்டக்டர் சுரேஷை கம்பால் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து திருவையாறு அரசு பஸ் போக்குவரத்து மேலாளர் திருஞானம் (50) நேற்று முன்தினம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் கடந்த 25ம் தேதி பஸ்சில் வந்த வடுகக்குடி சொக்கலிங்கம் மகள் பிரீத்தி என்பவர் பிரச்னை செய்ததை கண்டக்டர் கண்டித்தார்.

அதற்காக சொக்கலிங்கம், மருவூர் பிரபாகரன் மற்றும் அடையாளம் தெரிந்த 2 பேர் காரில் வந்து கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார். திருக்காட்டுப்பள்ளி சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து 4 பேரை தேடி வருகிறார்.
Advertising
Advertising

Related Stories: