பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்

பொன்னமராவதி, ஜன.29: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் நேரு பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் முருகேசன், திருமயம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் காலையப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். இதனை தொடர்ந்து பள்ளி, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : School Anniversary Celebration ,
× RELATED அகில இந்திய அளவிலான ஜெய் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா