கீரனூர் அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு

புதுக்கோட்டை, ஜன.29: புதுக்கோட்டை கீரனூர் அருகே நடந்து சென்ற ஆசிரியையிடம் 9 பவுன் தங்க சங்கிலியை தலைக்கவசம் அணிந்த இருவர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோயிலை சேர்ந்தவர் அருள்மேரி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் பாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இதனால், கீரனூர் எழில் நகரில் வீடு எடுத்துத் தங்கி, பள்ளிக்கு சென்று வருகிறார்.
வழக்கம்போல நேற்று பள்ளியை முடித்துவிட்டு கீரனூர் திரும்பிய அருள்மேரி, பாறைப்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் அவரை மறித்து, அருள்மேரி அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jewelery ,teacher ,Kiranur ,
× RELATED மார்த்தாண்டம் நகைக்கடையில்...