×

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி ஆராய்ச்சி படிப்புக்கு சீனா சென்ற மாணவர்களை மீட்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை

பொன்னமராவதி, ஜன.29: பொன்னமராவதியில் இருந்து சீனாவில் ஆராய்ச்சி படிக்கும் மாணவர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீட்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில் உள்ள வலையபட்டியைச்சேர்ந்த சின்னையா என்பவரது மகன்ஸ்ரீபன்(34). இவர் சீனாவில் ஆராய்ச்சிப்படிப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியாவைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக சொந்த நாட்டிற்கு அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த நிலையில் ஸ்ரீபன் சீனாவின் உகான் பகுதியில் நானோ டெக்னாலஜி ஆராய்ச்சிப்படிப்பாக கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் ஸ்ரீபனை பத்திரமாக மீட்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உகான் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 200பேர் உள்ளதாகவும், மற்ற நாட்டினர் தங்களது பிரச்னைகளை உடனடியாக தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் நமதுநாட்டினர் மட்டும் அதிக அளவு இன்னும் அங்கு உள்ளனர். எனவே என்னைப்போன்று இங்குள்ள தமிழர்களை இந்த வைரஸ் தாக்கப்படாமல் பாதுகாப்பாக தமிழத்திற்கு அழைத்துவர அரசு உதவவேண்டும் என அவர் கூறியுள்ளார். இதே போல பொன்னமராவதி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு மருத்துவம் படித்து வருகின்றனர். அவர்களையும் பத்திரமாக பாதுகாப்பாக அழைத்துவரவேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Parents ,restoration ,China ,coronavirus attack ,
× RELATED உசிலம்பட்டி பகுதியில் மாணவர்களின்...