×

பெரியபாளையத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை, ஜன. 29:  பெரியபாளையத்தில் போலி மது பானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து மாணவர்களின்  விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசாரம் நடைபெற்றது. பெரியபாளையம் மது விலக்கு அமலாக்கப்பிரிவு  காவல் துறை சார்பில் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் அருந்தக்கூடாது என்பதை வலியுறுத்தி  பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் மற்றும் மாணவர்களின்  விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் மற்றும் மது விலக்கு அமல் பிரிவு  டிஎஸ்பி  கல்பனாதத் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

அதன் பேரில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன்  தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் ராஜீ,  பள்ளியின் தலைமையாசிரியர் சம்பத், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலுமயில்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியபாளையம் அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள்  வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியின் போது வழிநெடுகிலும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் ஏட்டுகள் அருள்தாஸ், மணிவண்ணன், தியாகராஜ், யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Students awareness rally ,
× RELATED வெம்பக்கோட்டையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி