×

கல்வியாளர்கள் கோரிக்கை கந்தர்வகோட்டையில் பிளாஸ்டிக் கப் விற்பனை படுஜோர்

கந்தர்வகோட்டை, ஜன.29: கந்தர்வகோட்டை கடைவீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் விற்பனை படு ஜோராக நடக்கிறது.
கந்தர்வகோட்டையில் அதிகாரிகளின் திடீர் சோதனையால் பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தடைப்பட்டது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்த காரணத்தினால் அதிகாரிகளின் கவனம் தேர்தல் பக்கம் திரும்பியதால் பிளாஸ்டிக் கப்களின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. கந்தர்வகோட்டை கடைவீதியில் உள்ள ஒரு கடையில் மொத்த விற்பனை செய்வதற்காக குடோனிலிருந்து இருச்சக்கர வாகனத்தில் பாக்கெட், பாக்கெட்டாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடைகளில் சோதனை செய்வதைகாட்டிலும் பிளாஸ்டிக் கப் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சோதனை மேற்கொண்டு அவற்றை விற்பனைக்கு கொண்டு வருவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Educators ,
× RELATED 10 லட்சம் மாணவர்கள், 2 லட்சம்...