×

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம்

பொன்னேரி, ஜன. 29:  திருவள்ளூர் வடக்கு மாவட்ட மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்,  வடக்கு மாவட்ட அவைத் தலைவர்  பகலவன் தலைமையில் நடைபெற்றது. இதில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் மேஷ் ராஜ் வரவேற்றார். பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி கோபால், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சி.எச்.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன், ஜெயமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சந்திரன், கதிரவன், டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் சத்யராஜ், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், அபிராமி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு ஆகியோர் கலந்துகொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்ய வேண்டும் என  ஆலோசனைகள் வழங்கினர். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், புதிதாக பொறுப்பேற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மீஞ்சூர் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சிக் குழு தலைவர் அத்திப்பட்டு ரவி ஆகியோர் நன்றி கூறினர்.

Tags : Minjur South Union ,DMK ,General Members Meeting ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்