×

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் பருத்தி, மக்காக்சோளம் மறைமுக ஏலம்

பெரம்பலூர்,ஜன.29: பெரம் பலூரில் 3ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்கு முறை விற் பனைக் கூடத்தின் மூலம் பருத்தி மக்காச் சோளம் விளை பொருட்களுக்கான மறைமுகஏலம் இன்று (29ம் தேதி) நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் அருகே வட க்கு மாதவி சாலை, புறவ ழிச்சாலை சந்திக்கும் காந் திநகர் பகுதியில் பெரம்ப லூர் மாவட்ட வேளாண் மைத் துறை (விற்பனை- வணிகம்) கட்டுப்பாட்டின் கீழ் பெரம்பலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் உள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளா ண் பல்கலைக்கழக ஆரா ய்ச்சி விஞ்ஞானிகள் ஆலோசனையின் பேரில் கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்புவரை பருத்தி ஏலம் இங்கு வாராவாரம் செவ் வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2017 க்கு பிறகு விவசாயிகள் ஆர்வம் காட் டாதசூழலில், பலநூறு விவ சாயிகள் இடைத்தரகர்க ளின் பிடியில் சிக்கிக் கொ ண்டதாலும், வேளாண் மைத் துறையினர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத் தாத காரணத்தாலும் பரு த்திஏலம் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது இந்நி லையில் 3 ஆண்டுகளுக் குப்பிறகு நடப்பாண்டு மீ ண்டும் பருத்தி மக்காச்சோ ளம் விலை பொருட்களுக் கானஏலம் ஒவ்வொரு வார மும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடை பெறவுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் சாந்தா அறிவுறுத்தலி ன் பேரில் பெரம்பலூர் விற் பனைக்குழு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டு ள்ள அறிவிப்பில் தெரிவித் திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 56 ஆயிரம் ஹெக் டேர் பரப்பளவில், அதாவது ஒரு லட்சத்து, 38 ஆயிரத்து, 320 ஏக்கர் பரப் பளவில் மக்காச்சோள பயி ர்களும், 20 ஆயிரம் ஹெக் டேர் பரப்பளவில் அதாவது, 49,400 ஏக்கர் பரப்பளவில் பருத்திப் பயிர்களும் பயிரி டப்பட்டு தற்போது அறுவ டை நடைபெற்று வரும் சூழ லில் உள்ளது. இந்தப் பருத் தி மற்றும் மக்காச்சோளம் ஆகிய வேளாண் விளை பொருட்களை பெரம்பலூர் விற்பனைக் குழுவின் மூல ம், பெரம்பலூர் ஒழுங்குமு றை விற்பனைக் கூடத்தில், மறைமுக ஏலம் மூலம் விற் பனை செய்திட நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் வட க்கு மாதவி சாலையில், புற வழிச்சாலை காந்திநகர் பகுதியிலுள்ள பெரம்ப லூர் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் ஒவ்வொ ரு வாரமும் புதன்கிழமை தோறும் பருத்தி மற்றும் மக்காச்சோளம் விலை பொருட்களுக்கான மறை முக ஏலம் நடைபெற ஏற்பா டு செய்யப் பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலு ள்ள விவசாயிகள் தங்களால் விளைவிக்கப்பட்டு உள்ள வேளாண் விளை பொருட்களை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோ றும் நடத்தப்படும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண் டு, நல்ல விலை பெறுவ தோடு, சரியானஎடை, கமி ஷன், தரகு இல்லாமல் விற் பனை செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகி றது. இந்த மறைமுக ஏலத் தில் இந்திய பருத்திக் கழ கம், உள்ளூர் மற்றும் வெளி யூர் வியாபாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் தங் களின் விலை பொருளின் தரத்திற்கான விலையி னைப் பெறலாம். மறைமுக ஏலத்தில் வைக் கப்படும் வேளாண் விளை பொருட்களை, சுத்தம்செய் து, கலவை மற்றும் அயல் பொருட்கள் இல்லாமல், நன்கு நிழலில் உலர்த்திக் கொண்டுவந்து, நல்ல வி லைக்கு விற்று, பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகி றது. மேலும் விபரங்களு க்கு பெரம்பலூர் விற்பனை க்குழு செயலாளரை 82209 48166 மற்றும் 7373 877047 ஆகிய செல் போன் எண்க ளில் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.வேளாண் விளைபொருட்க ளை உலர்த்திக் கொள்ள உலர்களம் வசதியும், வே ளாண் விளைபொருட்க ளை இருப்பு வைத்துக் கொள்வதற்கு நவீன சேமி ப்புக் கிடங்கு வசதியும், ரூ 3 லட்சம் வரையில் பொருளீ ட்டுக் கடன் பெறும் வசதி யும் பெரம்பலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் தில் உள்ளது. இந்த வாய்ப் பினை பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பருத்தி பயிரிடும் பெருவா ரியான விவசாயிகள் முழு மையாகப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு அந்த அறிவிப்பின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Regulatory Outlet ,
× RELATED விவசாயிகளுக்கு ரூ.2 கோடி நிலுவை வைத்த...