×

2வது நாளாக பரபரப்பு நக்கசேலம் கருத்தாய்வு மைய பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பாடாலூர், ஜன.29: ஆலத்தூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில் நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி கருத்தாய்வு மையத்திற்கு உட்பட்ட பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கருத்தாய்வு மைய தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் வஹிதா பானு, சிறுவயலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் நாகராசன், புதுஅம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , கல்வியில் புதுமைகள் , பேரிடர் மேலாண்மை , பாலின வேறுபாடு களைதல் , குழந்தைகளின் உரிமைகள் , பள்ளி முழுமைத் தர நிலை மற்றும் மதிப்பீடு , கற்றலின் விளைவுகள் , அரசு பள்ளியில் ஏற்படுத்தி தந்து இருக்கும் அடிப்படை வசதிகள் குறித்தும் , தூய்மைப் பள்ளி , கனவுப் பள்ளி , போக்சோ சட்டம் பற்றியும் , பள்ளி வளர்ச்சித் திட்டம், கல்வி சீர் திருவிழா உட்பட பலத் தலைப்புகளில் பயிற்சி அளித்தனர் . நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி கருத்தாய்வு மையத்திற்கு உட்பட்ட 12 அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து தலா 6 பேர் வீதம் 72 உறுப்பினர்கள் பயிற்சிப் பெற்றனர். து.களத்தூர் ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.

Tags : Central School Development Team ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா