விரும்பிய பாடத்தை படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சீர்காழி, ஜன.29: சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பாரதி தலைமை வகித்தார் டிஆர்ஓ இந்துமதி, மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணி முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் வரவேற்றார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் சீர்காழி கொள்ளிடம் ஒன்றியங்களைச் சேர்ந்த 13 பள்ளிகளை சேர்ந்த 2008 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசுகையில், மாணவ மாணவிகள் தாங்கள் விரும்பிய பாடத்தைை படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். விருப்பமில்லாத பாடங்களை படிக்க கூடாது.

நன்றாக படித்து உயர் பதவிகளுக்கு வேலைக்கு சென்றால் உங்கள் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமையாக இருக்கும் என்றார்.
இதில் தாசில்தார் சாந்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள ரெஜினா ராணி, கஜேந்திரன் தலைமை ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, செந்தாமரைக்கண்ணன், கபிலன், கார்த்திகேயன், தமிழரசி, பழனிவேல், வீரசேகரன், சிவப்பிரகாசம், சரஸ்வதி, சீனிவாசன், அருளரசன், ராஜசேகர், கீதா நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி துணைத் தலைவர் ஏவி மணி ஆசிரியர் சங்க தலைவர் கோவி நடராஜன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாகை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நன்றி கூறினார்

Tags :
× RELATED பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி