வேளாங்கண்ணியில் பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்

நாகை, ஜன.29: வேளாங்கண்ணியில் மாயமான 3 பள்ளி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேளாங்கண்ணியில் அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 11 வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் நேற்று பள்ளிக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றனர். ஆனால் அந்த 3 மாணவிகளும் பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் வேளாங்கண்ணி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன 3 மாணவிகளை தேடி வருகின்றனர்.

Tags : school students ,Velankanni ,
× RELATED மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்...