பெற்றோர் அச்சுறுத்தலால் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

நாகை, ஜன.29: பெற்றோர்கள் அச்சுறுத்தலுக்கு பயந்து நாகை எஸ்பி அலுவலகத்தில் காதல்ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அம்மாச்சி ஊரணி பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி(21). இவர் நேற்று தனது காதலன் யாசர்அராபத்அலி என்பவருடன் நாகை எஸ்பி அலுவலகம் வந்தார். அவர்கள் நாகை எஸ்பியை சந்தித்து மனு கொடுத்தனர். இதில் தேவகோட்டை வாவாசந்து பகுதியைச் சேர்ந்த யாசர்அராபத்அலியை நான் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். இதை அறிந்த இருதரப்பையும் சேர்ந்த பெற்றோர்கள் எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வேறு இடங்களில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்து நாங்கள் தேவகோட்டையில் இருந்து தப்பி கடந்த 25ம் தேதி நாகை வந்தோம். நாகையில் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். இதை அறிந்த எங்களது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு கொலை செய்வதாக மிரட்டுகின்றனர். எனவே எங்களது உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மனுவை பெற்ற எஸ்பி செல்வநாகரத்தினம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags : shelter ,office ,SP ,parents ,
× RELATED மெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீவிபத்து: 15 குழந்தைகள் உயிரிழப்பு