விவசாயிகள் குறைதீர் கூட்டம் 31ல் நடக்கிறது

நாகை, ஜன.29: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31 ம் தேதி நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 31ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Farmers' Oversight Meeting ,
× RELATED விவசாயிகள் அவதி நாகையில் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்