சீர்காழி பத்ரகாளியம்மன் வீதி உலா

சீர்காழி, ஜன.29: சீர்காழி பிடாரி கீழவீதி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி விழா சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னப்பட்சி வாகனத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தன.

Tags : Bhadrakaliamman Street ,
× RELATED திருமயம் பகுதியில் நெடுஞ்சாலையில் மேற்கூரை இல்லாத பஸ் நிறுத்தம்