பாஜக பிரமுகர் படுகொலை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜன.29: நாகை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டபொதுச்செயலாளர் நாஞ்சில்பாலு முன்னிலை வகித்தார், மாநில விவசாய அணி செயலாளர் கோவிசேதுராமன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், மணிகண்டன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாவட்ட தலைவர் வெங்கடேசன் பேசுகையில், ‘தமிழகத்தில் தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். சென்ற ஆண்டு திருவிடைமருதூர் ராமலிங்கம் படுகொலை, இந்த ஆண்டு திருச்சி விஜயரகு கொலை என்று நீண்டுகொண்டே போகிறது, தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியினரும் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கின்றனர். விஜயரகு குடும்பப் பிரச்னையால் கொலை என்று காவல்துறை கூறுவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நீடிப்பது பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களை பாதுகாத்துக்கொள்ள நாங்களும் தயாராவோம் என்றார். முடிவில் நகர தலைவர் மோடிக்கண்ணன் நன்றி கூறினார்.

Tags : Mayiladuthurai ,BJP ,
× RELATED சமையல் எரிவாயு விலை உயர்வு காங். கண்டன ஆர்ப்பாட்டம்