×

பைபாஸ் சாலை மேம்பால இணைப்புகளை சீரமைக்காததால் குலுங்கியபடி செல்லும் வாகனங்கள்

கரூர், ஜன. 29: பைபாஸ் சாலை மேம்பால இணைப்புகளை சீரமைக்காததால் வாகனங்கள் குலுங்கியபடி செல்கின்றன. கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை என்எச் 7, மற்றும் தேசிய நெடுஞ்சாலை என்எச் 67 சாலைகள் உள்ளன. என்எச்7 காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக இச்சாலை திண்டுக்கல் மாவட்ட எல்லை வரை செல்கிறது. கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள சாலை சமீபத்தில் செப்பனிடப்பட்டது. எனினும் இணைப்புகளில் வாகனங்களின் டயர்கள் குலுங்கியபடி செல்கின்றன. இருசக்கர வாகனங்கள் அதிகமாக குலுங்கிய நிலையில் சென்று வருகின்றன.

மேம்பால இணைப்பில் தார்கலவை, இரும்பு கம்பியை சரியான முறையில் பொருத்த வேண்டும். மேலும் பைபாஸ் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. வாகனங்கள் எளிதில் சென்று வரும் வகையில் கீழ் பகுதியை மாற்ற வேண்டும். மேலும் ஆங்காங்கே ரிப்ளக்டரகள் உடைந்து கிடக்கிறது. சாலையிலும் தடுப்பு சுவர்களிலும் ஒளி உமிழும் வர்ணம் பூசாமல் உள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கணவாய் பகுதியில் சுங்க சாவடி அமைத்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாமக்கல் செல்லும் வாகனங்களுக்கு பரமத்தி வேலூரை தாண்டியதும் சுங்கசாவடியில் கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டணத்தை வசூலிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Tags : bypass road ,
× RELATED ஈரோடு பகுதியில் இன்று மின்தடை