×

வத்திராயிருப்பு பகுதியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

வத்திராயிருப்பு, ஜன. 29: வத்திராயிருப்பு பகுதியிலுள்ள பள்ளிகளில் 71வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.வத்திராயிருப்பு  கிரீன் பீல்ட்ஸ் மழழையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு  தாளாளர் பெரியமகாலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயகொண்டம்மாள்  தேசியக்கொடி ஏற்றினார். ஆசிரியை பனிமலர் வரவேற்றார். குடியரசு  தினவிழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவ-மாணவிகளுக்கு பரிசு  வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஆசிாியைகள் நல்லதாய், ரம்யா ஆகியோா் செய்திருந்தனா்.வத்திராயிருப்பு  அருகே சுந்தரபாண்டியம் விவேகா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடந்த  விழாவிற்கு தாளாளா் தியாகராஜன் தலைமை வகித்தார். முதல்வர் செந்தில் குமாரி  தேசியக்கொடி ஏற்றினார். மாணவி சிவமதி வரவேற்றார். ஆசிரியை மகாலட்சுமி  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி கவிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை  ஆசிாியைகள் புவனேஸ்வாி, ஜோதிஸ்வாி ஆகியோர் செய்திருந்தனா்.

வத்திராயிருப்பு  ரங்காராவ் அாிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,  கட்டுரை போட்டி போன்ற போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு  வழங்கப்பட்டது. தேசியக்கொடியை பள்ளி தாளாளா் விஜயகுமார் ஏற்றினார். பள்ளி  முதல்வா் மகாலிங்கம் மற்றும் அாிமா சங்க உறுப்பினா–்கள், ஆசிரியர்கள் கலந்து  கொண்டனர்.வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை  தாசில்தார் சசிகலா தேசியக்கொடி ஏற்றினார். மண்டல துணை வட்டாட்சியர்  கலைச்செல்வி மற்றும் தாலுகா அலுவலக பணியாளா–்கள் கலந்து கொண்டனா்.வத்திராயிருப்பு  ஒன்றிய அலுவலகத்தில் தேசியக்கொடியை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி  ஏற்றினார். கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜசேகா், மேலப்பாளையம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள், அலுவலக  பணியாளா–்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கண்ணன் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.

Tags : Republic Day Celebration ,
× RELATED மாநில இறகுப்பந்து போட்டியில் முதலிடம் தர்மபுரி மாணவருக்கு பாராட்டு