×

இன்று தேசிய செய்தித்தாள் தினம் தீ தடுப்பு பயிற்சி

தேனி, ஜன.29: வனத்திற்குள் தீ பிடித்தால் அணைப்பது எப்படி, தீயில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தேனி மாவட்ட தீயணைப்புத்துறையினருக்கு கைலாசமலை பகுதியில் பயிற்சிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை தீயணைப்புத்துறை  துணை இயக்குனர் சரவணக்குமார் நேரடியாக ஆய்வு செய்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன், தேனி நிலைய அலுவலர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் உள்ள எட்டு தீயணைப்பு நிலையங்களிலும் உள்ள வாகனங்கள், உபகரணங்கள், அவற்றின் தரம், செயல்பாடு திறன், தீயணைப்புத்துறையினரின் தயார்நிலை, மீட்புத்திறன் குறித்த ஆய்வும் நடந்து வருகிறது.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...