×

அரசு விதிகளை மீறி செயல்படுவதா? கலெக்டருக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

மூணாறு, ஜன.29: மூணாறில் அரசு விதிகளை மீறி நட்சத்திர விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக, இடுக்கி மாவட்ட கலெக்டருக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தேவிகுளம் எம்எல்ஏ விமர்சித்துள்ளனர்.  கேரள மாநிலம், மூணாறில் உள்ளது பள்ளிவாசல் வில்லேஜ். சமீபத்தில் இங்கு அரசு நிலங்களை ஆக்கிரமித்து, போலி பாத்திரங்கள் தயார் செய்து கட்டப்பட்டதாக 3 நட்சத்திர விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்து இடுக்கி கலெக்டர் தினேஷன்  அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் கட்டிடங்களை அரசு கைவசப்படுத்த தேவிகுளம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘‘கடந்த டிசம்பர் 17ம் தேதி திருவனந்தபுரத்தில் கேரளா முதல்வர் தலைமையில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில், 1964 மற்றும் 1993 ஆகிய வருடங்கள் தொடர்பான நிலம் சம்பந்தமான விதிகள் மற்றும் சட்டங்கள் குறித்த விஷயங்களில் அரசு நேரிட்டு முடிவுகள் எடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு நிலம் சம்பந்தமான முடிவுகள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், திடீரென்று  விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் எடுத்த முடிவு ஒத்துக்கொள்ள முடியாதது’’ என்று தெரிவித்துள்ளது. இதேபோல் தேவிகுளம் எம்எல்ஏ  எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து முதலமைச்சர் தலைமையில் கூடிய கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக அரசு சில முடிவுகளை எடுத்திருந்த நிலையில், பள்ளிவாசல் கிராமத்தில் 3 நட்சத்திர விடுதிகளின் உரிமத்தை கலெக்டர் ரத்து செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

Tags : Collector ,Marxist ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...