×

மக்களை பயமுறுத்தும் மின்கம்பம்

காளையார்கோவில், ஜன.29: காளையார்கோவில் அருகே மாராத்தூர் கிராமத்தில் வீடுகள், பள்ளிக்கூடம் உள்ள பகுதியில் மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் நிற்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது.  
காளையார்கோவில் ஒன்றியதிற்கு உட்பட்ட மாராத்தூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். வீடுகள் மற்றும் பள்ளிக்கூடத்திற்கு அருகாமையில் சில வருடங்களுக்கு முன் மின்கம்பம் அமைக்கப்பட்டது. தற்போது மின் கம்பத்தில் முற்றிலும் சிமிண்ட் கான்கிரிட் உடைந்து வெறும் கம்பிகள் மட்டும் தெரிகிறது. தற்போது பெய்த சிறு மழைக்கு மின்கம்பம் மிகவும் பழுதாகி செயல் இழந்து எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. மின் கம்பத்தை மாற்றித் தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொது மக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அருகில் வீடுகள் மற்றும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்