×

திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

ராமநாதபுரம், ஜன.29: ராமநாதபுரம் நகர் திமுக சார்பில் அரண்மனை முன்பு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் கார்மேகம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சேவியர், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் கிருபானந்த முன்னிலை வகித்தனர். நகர மாணவரணி அமைப்பாளர் வசந்தகுமார் வரவேற்றார்.
மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் கலையரசன், தலைமை கழக பேச்சாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் எம்எல்ஏ முருகவேல், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் போஸ், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஒன்றிய தலைவர் பிரபாகரன், தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரவீன், நகர் நகர செயலாளர்கள் ராமேஸ்வரம் நாசர் கான், கீழக்கரை பஷீர் அகமது, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் ஜீவானந்தம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர் மாணவரணி துணை அமைப்பாளர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.


Tags : martyrs ,DMK ,
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...