×

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாளை மனித சங்கிலி போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தொண்டி, ஜன.29:  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை மனித சங்கிலி பேராட்டம் நடத்துவது குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொண்டியில் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து திருவாடானையில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொண்டியில் நடைபெற்றது. தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் கடுமையான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும்  மனித சங்கிலி போராட்டத்தில் அதிகம் பேரை கலந்துகொள்ள செய்வது, குடியுரிமை திருத்த சட்டத்தின் தீமைகள் குறித்து கிராமங்கள் தோறும் விளக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் சேதுராமன், மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் பீர் முகம்மது, தவ்கித் ஜமாத் தலைவர் டக்காஸ் செய்யது அகமது, தமுமுக தலைவர் காதர், திமுக சார்பில் சௌந்திரபாண்டியன், ஜமாத்துல் உலாம சபை மாவட்ட செயலாளர் ஜலால், நம்புதாளை ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது உட்பட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : Human Chain Struggle Advisory Meeting ,Citizenship Law ,
× RELATED அசாமில் பிரசாரம் தொடக்கம் குடியுரிமை...