பலசரக்கு கடையில் ரூ.15 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

மதுரை, ஜன.29: மதுரை காமராஜர் சாலை பங்கஜம் காலனியை சேர்ந்தவர் ராஜன் (65), இவர் வெங்கலக்கடை தெருவில் பல்பொருள் அங்காடி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கடையை திறக்க வந்தபோது, ஜன்னல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.15 லட்சத்து 130 ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து விளக்குத்தூண் போலீசில் ராஜன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: