தென்னிந்திய கராத்தே போட்டியில் பதக்கங்களை குவித்த மேலூர் மாணவர்கள்

மேலூர், ஜன. 29: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், அகில இந்திய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டி 2 நாட்கள் நடைபெற்றன. இப்போட்டிக்கு உலக அளவிலான ஓகேஜிகேஎஸ் தலைவர் தக்கை யோசி ஆழ்வார்ஸ் தலைமை வகித்தார். போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் மோதினர்.இப்போட்டியில் மேலூர் வட்டத்தை சேர்ந்த 70 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், அரிட்டாபட்டி, உறங்கான்பட்டி, கருப்பட்டி, செம்மனிபட்டி, திருமோகூரை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 34 மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.இவர்களுக்கு, அகில இந்திய கராத்தே சம்மேளன தலைவர் கராத்தே தியாகராஜன் பரிசு வழங்கினார். பதக்கம் மற்றும் வெற்றி கோப்பையுடன் திரும்பிய மாணவர்கள், மதுரை தலைமைப் பயிற்சியாளர் சுதாகரன், மேலூர் வட்டார பயிற்சியாளர் ரவிச்சந்திரன் ஆகியோரை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வாழ்த்தி வரவேற்றனர்.

Related Stories: