உடன்குடி பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டு விழா மாணவர்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்

உடன்குடி,ஜன.29: உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளியில் புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ30லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்கான விழாவிற்கு பள்ளிச்செயலர் சுவாமி நியமானந்தாஜி ஆசியுரை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லிங்கேஸ்வரன் வரவேற்றார். பள்ளி பெற்றோர், ஆசிரியர் சங்கத்தலைவரும், இந்து முன்னணி மாநில துணைத்தலைவருமான ஜெயக்குமார் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் பாலசிங், துணைச் சேர்மன் மீரா சிராஜூதீன், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜீவானந்தம், நகர திமுக செயலர் ஜான்பாஸ்கர், திமுக முன்னாள் ஒன்றிய செயலர் சக்திவேல், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி நிர்வாகஸ்தர் மும்தாஜ்பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக அனிதாராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

Advertising
Advertising

கனிமொழி எம்பி புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி பேசியதாவது: தானங்களில் சிறந்த தானம் ஒருவருக்கு கல்வி அளிப்பதே. கல்விக்கு பெருமை சேர்க்கும் இந்த விழாவில் கலந்து கொள்வது மிகவும் பெருமை தரக்கூடியது. மாணவர்கள் கல்வி கற்பதன் மூலம் இந்த உலகை வெல்ல முடியும். வாழ்வை மேம்படுத்துவதற்கு கல்வி மிகவும் உறுதுணையாக இருக்கும். மாணவர்கள் கல்வியை மனப்பாடம் செய்து படிக்க கூடாது. நன்கு புரியும் வரை ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். கல்வியில் சிறப்பதன் மூலம் மாணவர்களால் நாட்டிற்கு, வீட்டிற்கும் பெருமை சேரும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து புதியநூலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்குமாறு பள்ளிநிர்வாகம் சார்பில் விடுத்த கோரிக்கையை கனிமொழி எம்பி ஏற்று நிதி ஒதுக்கீடு செய்தார்.   இதேபோல் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகித்தார். லே செயலர் ராஜா, உயர்கல்வி நிலவரகுழு செயலர் ஜெபச்சந்திரன், கிறிஸ்தியாநகரம் பள்ளி ஆட்சி மன்றகுழுத்தலைவர் ஞானராஜ்கோயில்பிள்ளை, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து தலைவி கிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித்தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன் வரவேற்றார். கனிமொழி எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ30லட்சம் மதிப்பீட்டில் கட்ட இருக்கும் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக உதவி குரு ஸ்டீபன் பால்ஞானராபின்சன் வேதபாடம் வாசித்தார், ஜான்தாமஸ் சபைமன்ற தலைவர் கோல்டு வின் ஆரம்ப ஜெபம் செய்தார். திமுக மாவட்டபொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வாழ்த்துரை வழங்கினார்.

 விழாவில் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பில்லாஜெகன், ஆழ்வார் யூனியன் சேர்மன் ஜனகர், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர் அணி மகாவிஷ்ணு, மாவட்ட கவுன்சிலர் ஜெஸிபொன்ராணி, துணை அமைப்பாளர்கள் சிறுபான்மை அணி சிராசுதீன், ரவிராஜா, கலைஇலக்கிய அணி மற்றும் வார்டு கவுன்சிலர் ரஞ்சன் மற்றும்  இந்து முன்னணி கோட்டப்பொறுப்பாளர் சக்திவேலன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் சலீம், அன்புராணி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் செம்மறிக்குளம் அகஸ்டா மரியதங்கம், பரமன்குறிச்சி லங்காபதி, நகர திமுக இளைஞரணி செயலாளர் அஜய், திமுக ஊராட்சி செயலாளர்கள் பரமன்குறிச்சி இளங்கோ, மெஞ்ஞானபுரம் ஜெரால்டு, மாவட்ட அமைச்சூர் கபடிகழக தலைவர் கிறிஸ்டோபர் ராஜன்,  ராமகிருஷ்ணா பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் செல்வசுந்தர், மணி, சுயம்பு, அம்புரோஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஆசீர்ராஜசிங், மெஞ்ஞானபுரம் ஊர்பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், செயலாளர் நவமணிராபர்ட், பொருளாளர் சொர்ணராஜ், துணைத்தலைவர் தேவசகாயம் உட்பட பலர் கலந்து கொண்டர்.

மெஞ்ஞானபுரம் பள்ளியில் நடந்த விழாவில் மேடையில் அமர்ந்திருந்த கனிமொழி எம்பியிடம் மனு அளிக்க மாற்றுத்திறனாளி ஒருவர் மணல் தரையில் மனுவுடன் அமர்ந்திருந்தார். அப்போது அவரை கவனித்த கனிமொழி எம்பி, தனது உதவியாளரிடம் அவரை அங்கிருந்த சேரில் அமர வைத்து உடனே மனுவை அவரிடம் வாங்க வைத்தார். இதனை மேடையில் இருந்த முக்கிய பிரமுகர்கள், திரண்டிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Related Stories: