கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் இன்று மின்தடை

கோவில்பட்டி, ஜன.29: கோவில்பட்டி மின்விநியோக செயற்பொறியாளர் (பொறுப்பு) முனியசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கோவில்பட்டி, விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், சிவஞானபுரம் ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு இன்று நடக்கிறது. இதன் காரணமாக கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல்மில்பகுதி, முகமதுசாலியாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்துநகர், சிட்கோ, ஜோதிநகர், புதுரோடு, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூர், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (29ம்) தேதி மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல் கழுகுமலை, எப்போதும்வென்றான், செட்டிக்குறிச்சி, சன்னதுபுதுக்குடி ஆகிய உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு இன்று நடக்கிறது. இதன் காரணமாக கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழ்மங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு மற்றும் வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒருபகுதி, சன்னதுபுதுக்குடி, வடகரை, காற்றாலை மின்தொடர் 1,11 ஆகிய பகுதிகளில் இன்று (29ம் தேதி) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Advertising
Advertising

Related Stories: