பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா

கோவில்பட்டி, ஜன.29:தூத்துக்குடி தாகூர் நினைவு நடுநிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. பள்ளி நிர்வாகி விவேகானந்தன் தலைமை வகித்தார். பள்ளி ஆலோசகர் தமிழ்கொடி தேசிய கொடியேற்றிவைத்தார். ஆசிரியர் பாஸ்கரன் குடியரசு தினத்தை குறித்து பேசினார். ஆசிரியை தமிழ்ச்செல்வி வரவேற்றார். ஆசிரியை சங்கரி நன்றி கூறினார். தூத்துக்குடி தூய பேட்ரிக்ஸ் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தங்கராஜன் டக்லஸ் தலைமையில் ஓய்வுபெற்ற நல்லாசிரியர் சம்பத் சாமுவேல் தேசியக்கொடியேற்றிவைத்தார். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தமிழ் ஆசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.மடத்தூர் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜெபராஜ் மனோகர் தேசிய கொடியேற்றி வைத்து மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி 3வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் பள்ளி நிறுவனர் சண்முகம் வரவேற்றார். அரிமா சங்கம் புஷ்பராஜ் கொடியேற்றி வைத்தார். அரிமா முருகன், ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியை ஜெயசண்முகம் நன்றி கூறினார்.

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் நடந்த குடியரசு தினவிழாவில் கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி கொடியேற்றி வைத்தார். கல்லூரி விளையாட்டு செயலர் பார்த்தீபன், செந்தூர்பாண்டி, சந்தனசங்கர், ராணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நடந்த விழாவில் துறைமுக ஐ.என்.டி.யு.சி. தலைவர் சந்திரசேகர் தேசிய கொடியேற்றிவைத்தார். இதில் ராஜகோபாலன், பால்ராஜ், மைக்கேல்ராயர், சண்முகையா, முருகேசன், ஸ்டீபன், சுரேஷ், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில்  குடியரசு தினவிழா நடந்தது. நாடார் உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன் தேசிய கொடியேற்றினார். பள்ளி செயலாளர் கண்ணன் இனிப்பு வழங்கினார். இதில் பொருளாளர் அய்யப்பன், தலைமையாசிரியர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிச்செல்வம் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். பள்ளி செயலாளர் கண்ணப்பன், பொருளாளர் கண்ணன், உறுப்பினர்கள் பாஸ்கர், கண்ணன், சண்முகசுந்தரம், பள்ளி முதல்வர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் பள்ளி இயக்குநர் உஷாராணி முன்னிலையில் தாளாளர் லட்சுமணபெருமாள் தேசிய கொடியேற்றினார். கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. கோவில்பட்டி பங்களாதெரு நகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பாபு தலைமை வகித்தார். சங்க செயலாளர் முத்துமுருகன், சாலை பாதுகாப்பு மாவட்ட தலைவர் முத்துசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் பரமேஸ்வரன் தேசிய கொடியேற்றினார். சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, பாபு, ரவிமாணிக்கம், நடராஜன், காளியப்பன், குணசேகரன், தலைமையாசிரியர் ராஜசரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாசரேத்: நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். பள்ளி முதல்வர் ஆக்னஸ் மேபல் வரவேற்றார். இதில் ரெஜினா புஷ்பராஜ் மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் தாளாளர் சாந்தகுமாரி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். தலைமை ஆசிரியை சில்வியா ரேச்சல் வரவேற்றார். இதில் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.  நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில்முன்னாள் எம்.பியும்,  கல்லூரி முன்னாள் தாளாளருமான ஏ.டி.கே ஜெயசீலன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். துணை முதல்வர் ஐரின் நிஷானி வரவேற்றார்.  இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கமலி ஜெயசீலன், முதல்வர் ஜெயராணிபிரேம் குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

எட்டயபுரம்: சிந்தலக்கரை எஸ்ஆர்எம்எஸ் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ராமமூர்த்தி சுவாமிகள் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் திருக்குமரன், மேலாண்மை இயக்குநர் பவாணிதிருக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் நித்தியமீனாட்சி வரவேற்றார். சிந்தலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை பள்ளியில் தேசியகொடிஏற்றி வைத்து பேசினார். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் காந்தியடிகள், நேதாஜிசுபாஷ் சந்திரபோஷ், சுப்பிரமணியசிவா, வீரபாண்டியகட்டபொம்மன், பாரதி உள்ளிட்ட தேசத்தலைவர்களின் வேடமணிந்து உரையாற்றினர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கிரிஜா செய்திருந்தார். மாணவி கோகிலவானி நன்றி கூறினார்.

உடன்குடி: வேப்பங்காடு உயர்நிலைப்பள்ளியில நடந்த விழாவிற்கு பள்ளிச் செயலாளர் ஆதிலிங்கம் தலைமை வகித்தார். நங்கைமொழி பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ் முன்னிலை வகித்து தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் பள்ளித்தலைமைஆசிரியர் செல்வகுமார் மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மெஞ்ஞானபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் கிருபா தேசிய கொடியேற்றி இனிப்புகள்வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேப்பங்காடு தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளிச் செயலர் ஆதிலிங்கம் தலைமை வகித்து தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் பள்ளிதலைமை ஆசிரியை பூங்கொடி, உதவி ஆசிரியை லதா, மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி தலைவர் அலுவலகத்தில் பாலசரஸ்வதி தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் ஜக்கம்மாள், ராஜா, பள்ளி மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வைகுண்டம்: கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவுக்கு  பள்ளி தாளாளர் பால்ராஜ் தலைமை வகித்தார்.. பள்ளி முதல்வர் சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். விழாவில் பஞ்சாயத்து தலைவர் ஆபிதாபானு தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களின் நடனம், பிரமீடு அமைத்தல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி நடந்தது.  ஆசிரியை செல்லம்மாள் நன்றி கூறினார்.

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி கே.ஏ. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் ஜெயந்தி பவிதா தலைமை வகித்தார். துணை முதல்வர் ரெபெக்காள் வரவேற்புரை ஆற்றினார். கே.ஏ.கல்விசங்க தலைவர் முகம்மது அப்துல்காதர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் துணை தலைவர் கணேசன், பொருளாளர் விகேஎம். பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள் அமிர்தராஜ், மகராஜன், பஹிர் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.

குளத்தூர்: குளத்தூர் த.மாரியப்பன் நாடார் முத்துக்

கனியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தினவிழா நடந்தது. கல்லூரி தலைவர் தாமஸ் தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் கெங்குமணி, கல்லூரி இயக்குனர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங்கிலத்துறைத்தலைவர் சுகிர்தாமலர் வரவேற்று பேசினார். குளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாலதிசெல்வப்பாண்டியன், துணைத்தலைவர் மாரிச்செல்விபாலமுருகன் ஆகியோர் கொடியேற்றி பேசினர். சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நாட்டுப்பற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் அன்பழகன் பரிசு வழங்கினார். தமிழ்த்துறை பேராசிரியை வசந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை பொன்னரசி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

குளத்தூர் அருகே உள்ள பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில்  குடியரசுதினவிழா கொண்டாப்பட்டது. பனையூர் கிராமத்தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார். துணை தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மரியஅனிதா வரவேற்று பேசினார். ஆசிரியை காந்திகனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலர் பவனந்தீஸ்வரன் கொடியேற்றி பேசினார். விளாத்திகுளம் ஒன்றிய 14வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கல்விசங்கத்தலைவர் தாளமுத்து, முன்னாள் கிராமத்தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் சுந்தரவேல் ஆகியோர்  பேசினர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினார்.  வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். ராகவன், முனியசாமி ஆகியோர் கொடியேற்றி பேசினர்.

அன்னை தெரசா சங்க செயலாளர் ஜேம்ஸ்

அமிர்தராஜ், பொருளாளர் முத்துகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் புங்கராஜ், நாகராஜ், லட்சுமி காந்தன், செந்தில்அதிபன், மாரிச்செல்வம், சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் புளோரிடா வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் சேகர் குடியரசு தின சிறப்புரையாற்றினார். தொடர்ந்து  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை ஜாய்பிரியா நன்றி கூறினார்.ஏரல்: ஏரல் லோபா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா நடந்தது. பள்ளி நிறுவனர் லோபா முருகன் தலைமை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரிமுத்து சுபேதார் தேசிய கொடியேற்றினார். ராணுவவீரர் சரசுராமன் தேசிய கொடியேற்றினார். ஆசிரியர்கள் ஸ்டீபன் டேவிட், சுமதி, எஸ்தர் ஜெயின்மேரி ஆகியோர் குடியரசு தின விழா குறித்து பேசினர். பள்ளி மாணவர் தலைவர் பாலு தேசிய கொடியேற்றுவதற்கான நிகழ்வுகளை நடத்தினார். பள்ளி மாணவிகள் சத்யா, செல்வமலர், ஜெனிபர், ஜோஷிதா, சவக்கின் பூஜா, பொன் ஜெனிஷா, அஷ்மிதா, பிரான்சியா ஆகியோர் தேசப்பற்று பாடல்களை பாடினர். பள்ளி முதல்வர் முகம்மது ராபி நன்றி கூறினார்.

Related Stories: