பெரியதாழை தூய காணிக்கை மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சாத்தான்குளம், ஜன. 29:பெரியதாழை யோவான், ஸ்தேவான் ஆலய தூய காணிக்கை மாதா  திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை யோவான், ஸ்தேவான் ஆலய , தூய காணிக்கை மாதா  திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பிப். 2ம்தேதி வரை 10 நாள்கள் நடக்கிறது. முதல் நாளன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. பின்னர் தூத்துக்குடி நற்செய்தி நடுவம் இயக்குநர் ஸ்டார்வின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. 3ம் நாளான 26ம்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் உறுதிபூசுதல் திருப்பலி, நடந்தது.  

Advertising
Advertising

2ம் நாள் முதல் 8ம் நாளான ஜன 31ம்தேதி வரை திருப்பலி, நவநாள், மறையுரை, நற்கருணை ஆசீர்  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.  9ம் நாளான பிப். 1ம் தேதி காலை 8.15மணிக்கு நவநாள் திருப்பலி, மாலை 6.30மணிக்கு  அருள்தந்தை ஜோசப் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை, அருள்தந்தை சுரேஷ் தலைமையில் மறையுரையும் நடக்கிறது. 10ஆம் நாளான பிப்.2ம் தேதி  காலை 7மணிக்கு  மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர் செல்வம் தலைமையில் பெருவிழா புதுநன்மை திருப்பலி நடக்கிறது. மாலை 6மணிக்கு மணப்பாடு புனித யாகப்பர் ஆலய பங்குதந்தை லெரின் டிரோஸ் தலைமையில் ஜெபமாலை நற்கருணை பவனி, சேதுக்குவாய்த்தான் பங்குதந்தை ராயப்பன் மறையுரை வழங்குகிறார். நிறைவு நாளான பிப். 3ம் தேதி காலை 6.15மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

Related Stories: