செட்டிக்குளத்தில் நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

சாத்தான்குளம் ஜன. 29: செட்டிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.  இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் தாலுகா பழங்குளம் கிராமத்தில்  திருச்செந்தூர் ஆர்டிஓ தலைமையில் அடுத்த மாதம்  மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. அதற்கு  முன்னோடியாக மனுக்கள் பெறும்  முகாம்  செட்டிகுளம் ஊராட்சி மன்ற  அலுவலகத்தில்   நாளை (30ம்தேதி) காலை 10மணி அளவில் நடக்கிறது. எனவே  பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பொதுப் பிரச்னைகள் சம்பந்தமாக மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: