சூரியன் எப்எம் சார்பில் உடன்குடியில் சிறப்பு பட்டிமன்றம்

நெல்லை, ஜன. 29:  சூரியன்  எப்எம் சார்பில் உடன்குடி கிறிஸ்தியாநகரில் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.  குடியரசு தினத்தையொட்டி உடன்குடி கிறிஸ்தியாநகரில் சூரியன் எப்எம், ஐடியல் நிறுவனம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு துணை நிற்பது சொத்து சுகமே, சொந்த பந்தமே என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த இந்த சிறப்பு பட்டிமன்றத்தில் சொத்து சுகமே என்ற அணியில் ராஜ்குமார், கருணாநிதி, நகைச்சுவை பேச்சாளர் ராஜா உள்ளிட்டோர் பேசினர். சொந்த பந்தமே என்ற தலைப்பில் கவிதா ஜவஹர், ஜான்சி, ரேவதி உள்ளிட்டோர் பேசினர். இறுதியில் இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நடுவர் சாலமன் பாப்பையா, சொந்த பந்தமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு துணை நிற்பது என தீர்ப்பளித்தார்.  ஏற்பாடுகளை சூரியன் பண்பலையினர் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: