ஆயர் பங்கேற்பு கருத்தபிள்ளையூரில் அந்தோனியார் தேர் பவனி முப்பெரும் விழா கோலாகலம்

கடையம், ஜன. 29: கருத்தபிள்ளையூர் அந்தோனியார் ஆலய முப்பெரும் விழாவில் பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி கலந்து கொண்டார். கடையம் அருகே உள்ள கருத்தபிள்ளையூர் புனித அந்தோனியார் ஆலய ஆண்டு திருவிழா, பவள விழா மற்றும் தேர் திருவிழா என முப்பெரும் விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இரு நாட்கள் விவிலியப் போட்டி, 19ம் தேதி வெள்ளி விழா தம்பதிகளுக்கு பாராட்டு, 20ம் தேதி குடும்பங்கள் மற்றும் அன்பியம் ஒருங்கிணைப்பு, 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், 26ம் தேதி புதுநன்மை விழா, நற்கருணை பவனி நடந்தது. நேற்று முன்தினம் பாளை. மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி, சமபந்தி விருந்து நடைபெற்றது. இரவு பவளவிழா மலர் வெளியிடுதலும், தொடர்ந்து  அந்தோனியார் தேர் பவனியும் நடைபெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் சைமன்செல்வன், சன்யாட்சன், பாக்கியசெல்வன், ஜெகன்ராஜா, ஆபிரகாம், சவேரியார், தினேஷ், தயாளன், சுந்தர் உள்பட கருத்தப்பிள்ளையூர் பங்கிற்குட்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நேற்று திருவிழா திருப்பலி, நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை கருத்தப்பிள்ளையூர் பங்குத்தந்தை அந்தோனி வியாகப்பன், திருவிழா குழுவினர், அன்பிய இறைமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : ceremony ,Antoniyar Theri Bhavani ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு