விஏஓவை மிரட்டிய தந்தை, மகன் கைது

களக்காடு, ஜன. 29: களக்காடு அருகே கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்தவர் அதிசயமணி மகன் ஞானசேகர். இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த தங்கையாவிற்கும் பத்திரப்பதிவில் தவறான பதிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கீழக்கருவேலங்குளம் கிராம நிர்வாக அதிகாரி பாண்டிதான் காரணம் என்று கருதினர். சம்பவத்தன்று கீழக்கருவேலங்குளம் கிராம நிர்வாக அதிகாரி பாண்டி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பெருமாள்குளத்திற்கு அடங்கல் பதிவு செய்ய பயிர் ஆய்வுக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஞானசேகர், அவரது மகன் ஜென்வின் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரியை அவதூறாக பேசினர். மேலும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து ஞானசேகர், ஜென்வின் ஆகியோரை கைது செய்தனர்.

Tags :
× RELATED மகன் மாயம் தந்தை புகார்