சுரண்டை அந்தோனியார் ஆலய திருவிழா

சுரண்டை, ஜன. 29: சுரண்டை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவ நாட்களில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 25ம் தேதி நற்கருணை பவனி, 26ம் தேதி திருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் திருப்பலி நிறைவேற்றி ஆசி வழங்கினார். மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது.
இதில் தென்காசி மாவட்ட காங். தலைவர் பழனி நாடார், திமுக மாநில வர்த்தக அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 27ம் தேதி காலை 7 மணிக்கு நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் இறைமக்கள் செய்திருந்தனர்.

Tags : Surandi Antoniyar Temple Festival ,
× RELATED டீக்கடையில் பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் செயின் பறிப்பு